Tuesday, May 13, 2014

தேசிய கடல்சார் மற்றும் கடற்படை வரலாற்று அருங்காட்சியகம் திறந்துவைப்பு! (படங்கள் இணைப்பு)

தேசிய கடல்சார் மற்றும் கடற்படை வரலாற்று அருங்காட்சியகம் ஒன்று திருகோனமலையில் மே மாதம் 09 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் தொல்பொருளியல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இலங்கை கடற் படையினரால் புனர் நிர்மாணிக்கப்பட்ட முன்னாள் டச் ஆணையாளரின் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில், தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி மற்றும் ரிய எட்மிரல் ரொஹான் அமரசிங்க மற்றும் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

படங்கள் - விடியல்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com