Friday, May 30, 2014

வாஸின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஆயுதங்கள் தொடர்பில் இராசயன அறிக்கையை சமர்ப்பிக்கவும்!

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் கலகெடிஹேன வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் இராசயன அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் கோட்டுக்கொண்டதற்கு அமைவாகவே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன ஆகியோர் பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com