பெண் கான்ஸ்டபிளின் உடலை தடவிய அரச ஊழியர்கள் கைது!!
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உடலை தடவி மோசமான வார்த்தைகளை பிரயோகித்த இருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடு நவகத்தேகம வீதியில் மெருங்கொட எனும் பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கடமை முடிவடைந்து மற்றொரு பொலிஸ் சார்ஜன்டுடன் சேர்ந்து அவரது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அந்நேரம் அவ்வீதியால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர். இவ்வாறு பயணித்த இருவரில் மோட்டார் சைக்கிளில் பின்புறமிருந்து பயணித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிலின் பின்புறம் தட்டிவிட்டுள்ளார். பின்னர் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பின்னர் குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிலும் அப்பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பயணித்த பொலிஸ் சார்ஜன்டும் இது தொடர்பில் ஆனமடு பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து உடன் செயற்பட்டுள்ள ஆனமடு பொலிஸார் சந்தேக நபர்களிருவரையும் கைது செய்துள்ளனர்.
ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட இருவரும் அரச பணியாளர்கள் எனவும் கைது செய்யப்படும் போது அவர்களிருவரும் அதிக மது போதையில் காணப்பட்டதாகவம் தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தேக நபர்களிருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள ஆனமடு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment