கார் விபத்தில் நடிகர் நாசரின் மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்; உடன் சென்ற மூவர் பலி!! (படங்கள்)
நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் மூவர் பலியாகினர். நடிகர் நாசரின் மகன் பைசல் சைவம் படத்தில் பாஷா என்ற பெயரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர்.
படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். கார் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
0 comments :
Post a Comment