Thursday, May 1, 2014

சட்டத்தின் கீழ் அனைவரும் சமமே! ஜனநாயகம் தொடர்பிலான சட்டத்தரணிகள் இயக்கம்!

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட மத விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கியிருப்பது, அரசியல் அமைப்புக்கு கேடு விளைவிப்பதாகும் என ஜனநாயகம் தெடர்பிலான வழக்கறிஞர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது பல சேனா இயக்கம் மற்றும் ராவண அமைப்பு போன்ற அடிப்படைவாத இயங்களினால் சிறுபான்மை இனத்திற்கு மற்றும் மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் நாட்டிலுள்ள சட்டத்தை அமுல்படுத்தாது, அடிப்படைவாத இயக்கங்களுக்கு அரசாங்க சட்டத்தை மதிக்காமல் அவர்களது சட்டத்தை மதித்து அதற்கு இடங்கொடுத்து, முழுமையாக நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறையின் முக்கிய பகுதியான சட்டத்தின் ஏகாதிபத்தியத் தன்மையை இல்லாமற் செய்துள்ளதாகவும், அரசியல் அமைச்சுச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் முன் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

என்றாலும், இந்த அடிப்படைவாத அமைப்புக்கள் மிகவும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுடன் தொடர்புற்று, மனித உரிமைகள் மீறி செயற்பட்டுவருவதாக அவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமையை மாற்றி அமைத்து, மீண்டும் நாட்டில் நீதியான அரசியலை, சட்டம் எல்லோருக்கு சமமான முறையில் கிடைப்பதற்கு அரசாங்கம், மத விவகாரங்களில் பிரச்சினைகள் எழாமல் இருப்பது தொடர்பில் செயற்படுவது குறித்து, வெவ்வேறு பிரிவுகளை ஆரம்பித்திருப்பதை ஜனநாயகத்திற்கான, சட்டத்தரணிகள் முழுமையாக எதிர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில் - இங்கு என்ன செய்யப்பட்டிருக்கின்றது என்றால், நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையாயின், நீதியை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுட வேண்டும் எனவும், சட்டத்தை நிலைநிறுத்துதல் இல்லாவிட்டால், நீதி கிடைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வேறொரு திசைக்கு மாற்றிவிடக்கூடிய நிலை இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment