Monday, May 19, 2014

எல்.ரி.ரி.ஈ தலைவர் நெடியவனை உடனடியாக இலங்கையிடம் ஒப்படைக்குமாறு நோர்வே அரசாங்கத்திடம் வற்புறுத்தல்!

நெடியவன் எனப்படும் புலிப்பயங்கரவாத தலைவரை உடனடியாக இலங்கையிடம் ஒப்படைக்குமாறு நோர்வே அரசாங்கம் வற்புறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரிடம் கையளிப்பதற்காக ஜாதிக ஹெல உருமய ஏற்பாடு செய்த பாத யாத்திரை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகி, நோர்வே தூதரகத்தை சென்றடைந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றதுடன் குறித்த மஹஜரை பொறுப்பேற்பதற்கு அலுவலகத்தில் பொறுப்பதிகாரி இல்லாமையினால் அதனை வெளியுறவு அமைச்சிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச பயங்கரவாதத்திற்கு முற்று புள்ளி வைப்பதற்காக நோர்வே அரசாங்கம் தமது பணியை நிறைவேற்ற வேண்டிய முக்கியத்துவத்தை ஆர்ப்பாட்டக்கதார்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைநகர் ஒஸ்லோவில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பேரின்ப நாயகம் சிவபரம் எனப்படும் நெடியவன் எனும் பயங்கரவாதியை உடனடியாக இலங்கையிடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நோர்வே அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளனர்.

1 comments :

arya ,  May 20, 2014 at 2:06 AM  

எப்படியும் ஒப்படைக்க மறுப்பார்கள், ஏற்கனவே கனடா, அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் இலங்கையின் தடையை ஏற்று கொள்ளவில்லை , இருப்பது ஒரு வழி தான் , அது மறை முக மோதும் வழி , அவர்களின் எதிரிகளுக்கு இங்கு அடைக்கலமும் , பயிட்சியும் அளிப்பது, கடல் வழியாக ஏற்றுமதியக்குவது , இப்படி செய்தால் சில வருடங்களில் வெள்ளைக்காரன் துண்டை காணோம் துணியை காணோம் என வந்து இலங்கையின் காலடியில் விழுவான் , " ஆனால் ஓன்று மட்டும் முக்கியம் , இப்படியான நடவடிக்கைகளை , மிக ரகசியமாகவும் நம்பிக்கையாக சக்திகளுடன் செய்ய வேண்டும்"

இலங்கையை சுற்றியுள்ள கடல் இலங்கைக்கு பலவீனத்தையும் , அதே நேரத்தில் பலத்தையும் தரும், பயன் படுத்தும் முறையுள் தான் வெற்றி தங்கியுள்ளது.

பயந்தால் ஒன்றும் செய்ய முடியாது, பந்தை எறிந்தவர் பக்கம் திருப்பி எரிய வேண்டியது தான்.

இப்ப இது போதும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com