Thursday, May 1, 2014

ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை! - தி.மு.

சில தேரர்களின் தேவையற்ற செயற்பாடுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என பிரமர் தி.மு. ஜயரத்ன தெரிவிக்கிறார்.

கம்பொல - கஹட்டபிட்டியவில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிவாசலைத் புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

“சமீப காலத்தில் மத மற்றும் அரசியல் ரீதியாக ஒரு சில பகுதியினர் இலங்கைக்குள் பிரச்சினைகளை உண்டுபண்டுவதற்காக பல்வேறு கருமங்களை ஆற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். என்றாலும், இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு இலாபத்தை மையப்படுத்தியே இவ்வாறு செய்கின்றார்கள் என்பதை தெளிவுறுத்த வேண்டியுள்ளது. அதனால்தான், மதப் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை ஆய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதியதொரு பொலிஸ் பிரிவை ஆரம்பித்திருக்கின்றார்.

நாங்கள் தற்போது கூடியிருக்கின்ற கஹட்டபிட்டிய பள்ளிவாசல் மிகவும் பழைமை வாய்ந்த பள்ளிவாசலாகும். இவ்வாறான இடங்கள் மூன்று இலங்கையில் இருக்கின்றன. சிறு வயது முதல் இப்பள்ளிவாசல் பற்றி எனக்கு நன்கு தெரியும். முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று இருந்தபோதும் பௌத்தர்களிடையே எந்த கருத்துமுரண்பாடும் இருக்கவில்லை. என்றாலும், இன்று மதங்களை வைத்து பிரச்சினைகளை உண்டுபண்ணுவதற்காக சிலர் முழுமுயற்சியுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இதைச் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

ஐந்து இனங்களும், நான்கு மதங்களும் நின்று நிலவுகின்ற இந்நாட்டில், நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். சிறு பிரிவினரின் சூழ்ச்சிகளில் சிக்கித் தவிக்காமல் இருக்குமாறு பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment