இராணுவச்சிப்பாயால் படுகொலை செய்யப்படுவதற்கு முன் மாணவி இறுதியாக எழுதிய மனதை உருக்கும் முகநூல் வரிகள் ! (படங்கள்)
நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள் ...
ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில் ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்....
கொழும்பு பல்கலைக் கழக மாணவி டிமாசா கயனகி திமான இராணுவச்சிப்பாயால் படுகொலை செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்த சிங்களக் கவிதையின் தமிழ் வடிவம் இது. இதனை முக நூல் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்... மனதை மிகவும் பாதித்திருந்த கவிதை இது...
எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
அந்நாளில் நினைவில் வராதோர் அனேகர்
எனினும் நினைவில் வரக் கூடிய சிலரில்
நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது
நான் மரிக்கும் நாளில் வாருங்கள்
என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்
ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில்
ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்
இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்
குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
முன்பு பழகியதையெண்ணி
நெற்றியிலொரு முத்தமிடுங்கள்
ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்
எனது நற்குணங்களை விமர்சிக்கும்
பதிலாக எதுவும் பேசாது
ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்
கல்லறையிலிருந்து நீங்கள்
நீங்கிச் செல்கையில்
மாபெரும் தனிமையை நான் உணரக் கூடும் - எனவே
ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது
- செல்வி. டிமாஷா கயனகி
1 comments :
கவிதை நன்றாக மட்டுமல்ல பிரமாதமாகவும் இருக்கிறது.
ஒரு இளம் குருத்து எப்படி சாவைப் பற்றி அபிநயம் பிடிக்க முடியும்?.
இந்த இளமை வாழ்வுக்கு வந்த சோதணைதான் என்ன?
இவரின் இறப்பு வாழ்வில் ஏற்பட்ட விரக்தியாகவே கருத வேண்டியுள்ளது. மனப்பலவீனம் உள்ளவர்கள் தான் தற்கொலையை நாடுகிறார்கள்.கவிதையும் அதைத் தான் கூறுகிறது.
ஆயிரம் மர்மங்கள் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னும் மறைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.இதில் இந்த இராணுவவீரர் அப்பாவியாக குற்றம் சாட்ப்பட்டிருக்கிறார் என்பதையே கவிதை விபரிக்கிறது.
இறந்தவரை விட இருப்பவர்களுக்காக தான் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இந்த சிப்பாய் ஒரு கொலையாளியாக இருப்பார் என நான் கருதவில்லை.
இந்த கவிதையே சாட்சி.
Post a Comment