Friday, May 9, 2014

முன்னாள் பாதுகாப்புச் செயலர் வடக்கின் ஆளுநரை விரட்டுவதற்கான பிரயத்தனத்தில்...!

வடக்கின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிரியை பதவி நீக்கம் செய்வதற்காக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக கலாநிதி குணதாச அமரசேக்கர தெரிவிக்கிறார்.

பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களின் முக்கியத்தர்களும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவரும் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளநரின் தற்போதைய பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடையவுள்ளதாகவும், அதன் பின்னர் தொடர்ந்து அவரை ஆளுநராக வைத்திருக்க்க் கூடாது எனவும் அந்தக் குழுவினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துவருவது ஒரு விசேட காரணத்திற்காகவே.

எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள தென்னாபிரிக்க முக்கிய பங்குபற்றாளர் ஒருவரின் பங்குபற்றுதலின் கீழ் வட மாகாண சபை புதிய பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, அதற்கு முக்கிய தடையாக இருப்பவர் ஆளுநரே.

அதனால், வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஷ்வரன் எவ்வாறேனும் ஆளுநரை பதவியிலிருந்து இறக்குவதற்காக அதிக பிரயத்தனம் எடுக்கிறார்.

இந்த சூழ்ச்சியில் சிக்கி அரசாங்கம் பிரிவினைவாதிகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்குமாயின், அது நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் கலாநிதி குணதாச அமரசேக்கர மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com