ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய அமைப்பான தேசிய இளைஞர் முன்னணியினால் பிபிலையிலிருந்து கதிர்காமம் வரை செல்வதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாத யாத்திரை பொதுமக்களின் பங்களிப்பு இன்மையால் இடையில் நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டி ஆரச்சியினால் இந்த பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
எதுஎவ்வாறாயினும், இந்த பாத யாத்திரை சரியான ஒழுங்கு முறையில் அமையாததால் அதனை நிறுத்துமாறு ஏற்கனவே, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் அமைப்பாளர்களும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துள்ளனர். அதனையும் கருத்திற் கொள்ளாது குட்டி ஆரச்சி ஏற்பாடு செய்துள்ள இந்த பாத யாத்திரைக்காக வெறும் ஒன்பது பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் ஒன்பது பேரும் பிபிலை நகரத்தில் குட்டி ஆரச்சியின் “பெனர்” ஒன்றை சுமந்த வாகனமொன்றில் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளதுடன், கொஞ்சம் தூரம் சென்று பாத யாத்திரைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர்.
இறுதியில் பாத யாத்திரையில் கலந்து கொண்ட ஒன்பது பேரில் ஐவர் மாத்திரம் பெனரைச் சுமந்த வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். இவ்விடயம் பற்றித் தெரிந்து கொண்ட குட்டி ஆரச்சியும் தனது பாத யாத்திரையை நிறுத்தியுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment