தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்டார். அவருடன் அவ்வியக்கத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான உறுப்பினர்களும் புலிப்பாசிசத்தால் குதறப்பட்டது. புலிகளால் அவ்வியக்கத்தின் தலைமை மற்றும் உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தும் கதிரைகளுக்காக அவ்வியக்கத்தின் ஒரு தொகுதியினர் புலிகளிடம் சரணாகதி அடைந்திருந்தனர். இவர்கள் தமது தலைமைக்கோ உறுப்பினர்களுக்கோ புலிகள் பலமாக இருக்குவரை எவ்வித அஞ்சலியையும் செலுத்தவில்லை என்பது யாவரும் அறிந்தது.
இன்று புலிகள் மஹிந்தரின் அழித்தொழிக்கப்பட்டமை தொடர்ந்து நேற்று ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.
அங்கு பேசிய அடைக்கலநாதன் விநோதரதலிங்கம் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மக்களின் நலமை கொண்டு விட்டுக்கொடுப்புக்களுக்கு முன்வரவேண்டும் என் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போது தமிழ் தேசி்யக் கூட்டமைப்புக்கு பலர் உரிமையாளர்களாக தம்மை காட்டிக்கொண்டாலும் கூட்டமைப்பு கிழக்கின் ஊடகவியலாளர்கள் சிலரின் அயராத உழைப்பால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment