ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை 5.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் தெற்கில் உள்ள இசு ஒஷிமா தீவு அருகே கடலுக்கு இடியில் 160 ஆழத்தில் உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது.
மத்திய டோக்கியோவில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுகத்தால் 4 பேர் காயம் அடைந்ததாக டோக்கியோ தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ரயில் சேவை தாமதானது.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 9 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தற்போது தான் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 18 ஆயிரத்து 500 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment