16 அமைப்புக்களையும் 424 நபர்களையும் இலங்கை அரசு தடை செய்தமை கனடாவிற்கு கவலையாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசு புலம்பெயர் நாடுகளிலே செயற்படுகின்ற புலிப்பினாமி அமைப்புக்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களை தடை செய்திருந்தது. இலங்கை அரசின் இந்நடவடிக்கையானது மேற்படி நபர்களினது செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் மீது ஐ.நா வின் உறுப்புநாடுகள் சட்ட நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கின்றது என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் மேற்படி தடை நடவடிக்கை தமக்கு கவலை அளிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளதுடன் இலங்கை அரசின் இந்நடவடிக்கை இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதகமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையால் குறித்த நாடுகள் சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நாடுகளில் இருப்பின் அவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளமையை ஜீரணிக்க முடியாத கனடிய அரசாங்கம் நீலிக்கண்ணீர் வடிப்பதாக உணரமுடிகின்றது.
0 comments :
Post a Comment