13 இலட்சம் அரச ஊழியர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! - தொழிற்சங்கங்கள்
நிறுவன மேலாளர்களினால் அரச ஊழியர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்குப் பதிலாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக பிரச்சினைகளை இல்லாமற் செய்யும் உபகரணமொன்று உருவாக்கப்பட்ட போதும், அமைச்சரவை அதற்கான அனுமதியைப் பெற்றுத் தராமையினால், 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச பணியாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஒருமைப்பாட்டு தொழில் சங்கங்கள், அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
125 ஆண்டுகளாக தொழிலாளர்களின் உரிமைகளை வெற்றி கொண்ட நாளாக மே தினம் இதுவரை நினைவுறுத்தப்பட்டு வந்தாலும், அரச ஊழியர்களுக்கு குறையாக இருந்த இந்த உபகரணத்தை 2011 ஆம் உருவாக்கியதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிடுகிறார்.
தென் ஆபிரிக்காவிலிருந்து மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதும், அமைச்சரவையின் அனுமதி இதுவரை கிடைக்காமையால் அதனைச் செயற்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த வரைவு அமைச்சரவைக்கு 2011 ஆண்டு முன்வைக்கப்பட்டது எனவும், குறைந்தளவு இவ்வரைவு தொடர்பில் பேச்சுவார்த்தையேனும் நடாத்துவதற்கு அமைச்சரவை முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment