வட மாகாணத்தை சேர்ந்த 1000 இளைஞர் யுவதிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்ககப் படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது பற்றி பிரிகேடியர் மேலும் கூறியதாவது-இலங்கை ராணுவம் வட மாகாணத்தின் ஆயிரம் இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் சேர்ந்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.இராணுவத்தில் ஆயிரம் பேருக்கான வெற்றிடங்கள் உள்ள போதிலும், அதில் இணைவதற்கு அதனை விட ஐந்து, ஆறு மடங்கு எண்ணிக்கையானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், அவ்வளவு வெற்றிடங்கள் எங்களிடம் இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்படுமாயின் அவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளோம். இவர்கள் இராணுவ சிவில் சேவைகளுக்கே பயன்படுத்தபடுவர். அதற்கான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment