ஹம்பாந்தோட்டையில் பா.உ. தாக்கப்பட்டதற்கான காரணம் அரசாங்கமே எனச் சொல்லப்பார்க்கிறது UNP !
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பவற்றைப் பார்வையிடச் சென்றவேளை, பிரதேசத்தவர்களால் அவர்கள் தாக்குதலுக்குள்ளானதை அரசாங்கத்தின் கணக்கில் வரவில் வைக்கப் போவதற்கான முயற்சி நடைபெறுகின்றது என பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிடுகிறார்.
“இந்நாட்டிலுள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அதனைக் காணச் செல்லலாம். அதேபோல, யாரும் அபிவிருத்தித் திட்டங்களைக் காணச் செல்லலாம். எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.
மத்தல விமான நிலையம், மகிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகம் என்பவற்றைப் பார்வையிடுவதற்காக பலரும் சென்றுள்ளனர். கதிர்காமத்திற்குச் செல்லும்வேளையும் இவ்வபிவிருத்தியைப் பார்வையிடச் சென்றனர். இந்த அபிவிருத்தியை பா.உறுப்பினர்களும் கண்டுகளிக்கும் உரிமையுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் காணச் செல்லும்போது சிற்சில விடயங்களை முன்வைத்துவிட்டுத்தான் செல்கிறார்கள். அவற்றைப் பார்க்கச் செல்லும்போது அப்பிரதேச மக்களின் விடை அவர்களுக்குக் கிடைக்கின்றது. அதுதான் அங்கு நடந்துள்ளது” என அமைச்சரின் வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment