புலிப்பினாமிகள் உட்பட NGO 16 இற்கு இலங்கையில் தடை!
இலங்கையினுள் புலிகள் அமைப்பையும், அதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவி வழங்கும் 16 அமைப்புக்களையும் தடை செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிடும்போது, இலங்கையில் அவ்வமைப்புக்களை தடை செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச ரீதியில் தடைசெய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்களாவன -
1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு
2 தமிழ் புனருத்தாபன அமைப்பு (ரீ.ஆர்.ஓ)
3 தமிழ் ஒருங்கிணைப்பு குழு (ரீ.ஸீ.ஸீ)
4 உலக தமிழ் அமைப்பு
5 கனேடிய தமிழ் காங்கிரஸ்
6 அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
7 உலகளாவிய தமிழ் சம்மேளனம்
8 கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் (மக்கள் அவை)
9 தமிழ் தேசிய கவுன்சில்
10 தமிழ் இளைஞர் அமைப்பு
11 உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு
12 “ஈழத்தில் அரசாங்கம்” கற்பனையில் உள்ள அமைப்பு
13 தமிழீழ மக்கள் கூட்டம்
14 உலக தமிழ் உதவி நிதியம்
15 தலைமை அமைப்பு
16 பிரித்தானிய தமிழ் மாநாடு
(கேஎப்)
0 comments :
Post a Comment