Wednesday, April 23, 2014

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சடலமாக மீட்பு!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 59 வயதுடைய எஸ். தன்ராஜ் என அடையளாம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் இன்று காலை கண்டிக்கு செல்ல பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் இன்று காலை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் பிரதான நுலைவாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது இவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment