புலிகளின் புதிய தலைவர் கோபி துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
பிரகாரனின் பின்னர் இலங்கை புலிப்பினாமிகளின் தலைவர் எனக் கூறப்படுகின்ற பொன்னையா செல்வநாயகம் கஜீபன் எனும் கோபி என்றும் காசியன் (31) என்றும் அழைக்கப்படுகின்ற கனவாகன ஓட்டுநர் மற்றும் இன்னும் இருவர் இன்று புளியங்குளம் விடத்தல்தீவில் இராணுவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிடுகிறார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான அடுத்த இருவரில் ஒருவர் தேவியன் எனவும், அடுத்தவர் பற்றி தெரியாதவிடத்தும் அவர் அப்பம் என சந்தேகிப்பதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் இருக்கின்ற புலித்தலைவர் நெடியவன் மற்றும் விநாயகன் இருவரினதும் இலங்கைச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் இவ்விருவருமே எனவும் அவர்கள் பெருங்காட்டுப் பகுதியில் இருப்பதாகவும் கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை காட்டைச் சுற்றி வளைத்ததாகவும், அவர்கள் இருவரும் தப்பியோட முனைந்தபோது அவர்கள் இருவரும் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர் எனவும் இராணுவம் அறிவிக்கிறது.
கோபி நோர்வேயில் நெடியவனைச் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி இலங்கைக்கு வருகைதந்து, புலிகளின் தலைவராக செயற்பட்டபோது, பொலிஸார் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அதன்பின்னர் அவரைக் கைதுசெய்வதற்கு ஒத்துழைப்பு நல்குவோருக்கு பரிசில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
(கேஎப்)
0 comments :
Post a Comment