மிகச் சிறப்பாக நடைபெற்ற அறபியன் பாத யாத்திரை! (படங்கள் இணைப்பு)
வெலிகம அறபா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மே 01ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பரிசளிப்பு, கண்காட்சி, கடைத்தொகுதி, வினோத அம்சங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இவ்விழாவினை கண்டுகளிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு பிற்பகல் இரண்டு மணியிலிருந்தும் ஏனையோருக்கு மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இக்கண்காட்சியினை பார்வையிட முடியும். பாடசாலை பிள்ளைகளின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி கூடங்களும் அரச தனியார் நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. நுழைவுச்சீட்டுக்களை தினமும் நுழைவாயிலில் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், இந்த அருச்சந்தர்ப்பத்தை தவறிடாது கண்காட்சியினை பார்வையிட வருகை தருமாறு கல்லூரி ஏற்பாட்டுக்குழவினர் அனைவரையும் வேண்டிக்கொள்கிறார்கள்.
125ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு முதல் நாள் கடித உறையும் முத்திரையும் வெளியடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1888ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையின் மூன்றாவது முஸ்லிம் பாடசாலையாக கருதப்படுகிறது. தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் மாணவர், மாணவிகளுக்கான விடுதிகள் காணப்படுகின்ற, க.பொ.த. உயர் தர விஞ்ஞான, கணித மற்றும் தொழில்நுட்பப் பிரிவு உட்பட ஆங்கில மொழிப் பிரிவையும் உள்ளடக்கிய ஒரேயொரு பாடசாலை இதுவாகும்.
இவ்வைபவத்தையொட்டி நேற்று (27)ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 'அறபியன் பாதயாத்திரை' இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment