Monday, April 21, 2014

த.தே.கூ வின் கோரிக்கையை நிராகரித்தது தென்னாபிரிக்கா!

தமது அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அநுசரணையாளராக கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை, தென்னாபிரிக்கா நிராகரித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, இவ்வேண்டுகோளை விடுத்திருந்தனர். தென்னாபிரிக்க விசேட பிரதிநிதி சிரில் ரமபோசாவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது, இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென, தென்னாபிரிக்க அங்கு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் மூன்றாவது தரப்பினரின் அநுசரணையை எதிர்பார்க்கவில்லையென்றும், தென்னாபிரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சகவாழ்வு செயற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென, புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வற்புறுத்தி வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment