கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றுகின்ற சகல சிற்றூழியர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மாகாண வைத்திய சாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் நீண்ட காலமாக மேலதிக நேரக் கொடுப்பனவூ அதிகரிப்புக்கு விடுத்த கோரிக்கைக்கு தீர்வூ எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்திய சாலைகளில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களுக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவூ அவர்கள் திருப்தியளிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் அவ்வாறு வழங்கப் படாமை பாரியதொரு குறையாக இருந்து வந்துள்ளது.
அனேகமான வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் தங்களது கடமை நேரத்துக்கு மேலதிகமாக நாளொன்றிற்கு பல மணித்தியாலங்கள் கடமையாற்ற வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டு அவ்வாறு கடமையாற்றி வந்த போதும் அதற்கான கொடுப்பனவை வழங்காமல் ஆகக் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 40 மணி நேர மேலதிக கொடுப்பனவே சிற்றூழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
குறித்த இவ்விடயத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் கவனத்துக்கு சிற்றூழியர்கள் கொண்டு வந்ததன் நிமிர்த்தம் அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக மேலதிக நேரக் கொடுப்பனவானது 40 மணித்தியாலத்திலிருந்து 60 மணித்தியாலமாக அடுத்த மாதத்திலிருந்து அதிகரித்து வழங்குவதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யு.எம்.இஸ்ஹாக்
No comments:
Post a Comment