தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதை புலிகள் தடை செய்தார்கள் ஆனால் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்தில் இணைந்துகொள்ள எந்த விதமான தடையும் இல்லை. தகுதியுள்ள இலங்கையர் அனைவரும் முப்படைகளில் சேர்த்துக்கொள்ளப்படு கின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கனா ஊடக மத்திய நிலையத்திதல் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தெடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
1881 ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக இராணுவப் படை உருவாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அது 1949 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் ஆகிய அனைவருக்கும் இராணுவத்தில் சேர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டே வந்துள்ளது.
ஆனால் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதை புலிகள்தான் தடை செய்தார்கள். இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டு நாட்டில் நல்லிணக்கம் உருவாகிவருகின்றது. முப்படைகளிலும் ஆயிரக் கணக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் முப்படைகளிலும் இணைந்துகொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர். அனால் வெற்றிடங்கள்தான் குறைவாக இருக்கின்றன.
அரசியல் இலாம் பெறுவதற்காகவே சில தமிழ் அரசியல்வாதிகள் இது தொடர்பான பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றனர் என்றும் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்
No comments:
Post a Comment