மலேஷிய விமானத்தை தேடும் சீனக் கப்பலுக்கு கிடைத்தது 'துடிப்புச் சமிக்ஞை' !
காணாமல் போன மலேஷிய எயார்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Haixun 01 எனும் சீனக் கப்பலில் காணப்படும் கருப்புப் பெட்டிகளை கண்டறியும் சாதனத்தில் விநாடிக்கு 37.5 ஹேர்ட்ஸ் (37.5Hz) அதிர்வெண் கொண்ட சமிக்கையொன்று இந்துசமுத்திரத்தின் தென் பகுதியிலிருந்து உணரப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சமிக்கையானது சுமாராக 25 பாகை தெற்கு அகலாங்கு, 101 பாகை கிழக்கு நெட்டாங்குப் பகுதியிலிருந்து கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்திலிருந்து வந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment