Wednesday, April 16, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரை காணவில்லை என வன்னி மக்கள் முறைப்பாடு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு சார்பில் மூன்று உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநோதரராரலிங்கம் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவார். இவர்களில் வினோ எம்.பியை காணவில்லை என வன்னி மக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை நெற் இணையத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கந்தையா சுப்பிரமணியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்னி தேர்தல் தொகுதியில் நாங்கள் மூன்று எம்பிமாரை தெரிவு செய்தம். ஆனந்தன் எம்பி அடிக்கடி வந்து போறார். அவருடைய இரண்டு பேர் இங்க மாகாண சபைக்கு தெரிவாகி இருக்கினம். அதால இங்க ஒரே வாறார். செல்வம் எம்பி எப்பாவது இருந்திட்டு வருவார். அவர் இந்தியா விவகாரம் கையாள்வதால் நாம் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. ஆனா இந்த வினோவைத் தான் கண நாளாக காணவில்லை. கடைசியா மாகாணசபைத் தேர்தல் மூட்டம் வந்தவர். இப்ப ஆள் இல்லை. வவுனியா, மன்னார் என எல்லா இடத்திலும் விசாரித்திட்டம் அங்கேயும் அவர் இல்லை என்கிறார்கள்.

மற்ற உறுப்பினர்களிட்டயும் கேட்டனான்கள். அவர்கள் அவரை தெரியாத மாதிரி கதைக்கிறார்கள். ஒரு வேளை மறந்திருப்பாங்களோ தெரியாது. நாம் வாக்கு போட்ட படியா மறக்கேல. வாற கிழமையும் பார்த்திட்டு அவரை கண்டு பிடிக்குமாறு கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

1 comment:

  1. வடக்கு தமிழ் சனம் அறிவு, சுரணை அற்ற வெறும் ெங்காயங்கள் என்பது உண்மை.
    எனவே தான் காலா காலம் தமிழ், தாயம்,விடுதலை என்று பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றும் கூட்டத்தை ஆதரித்து கால காலம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ெங்காய தமிழ் சனம் ஒருபோதும் அலசி ஆராந்து, சிந்தித்து நடந்ததில்லை. எனவே தான் வடக்கின் நிலைமை இப்படியிருக்கு.
    எமது தேவை, எமது வாழ்வு, எமது முன்னேற்றம் என்பதே முக்கியம். அதற்குரியவர்களை தெரிவு செய்வதே இன்றைய தேவை. நாம் எமக்கு நன்மை கிடைக்கும் வழியை மட்டுமே நாட வேண்டும்.
    இனிமேலும் சிந்திப்பார்களா??

    ReplyDelete