Tuesday, April 22, 2014

பொதுபல சேனாவுக்கு டொலர், பவுண்… ஜாதிக்க பல சேனாவுக்கு டினார், ரியால்…

பொதுபல சேனா டொலர்களுக்கும் பவுண்களுக்கும் முன்னோக்கி வந்தாலும், ஜாதிக்க பல சேனாவின் பெயரில் வருகின்ற டினார்களுக்கும், ரியால்களுக்கும் முன்னோக்கி வந்தாலும், நாட்டு இனங்களின் மதங்களினிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற அவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே என அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.

பதுளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

“பிளவுகளை ஏற்படுத்துகின்ற அவர்கள் பணம் பெறுவது யூரோக்களினால் இல்லாதுவிட்டால் டொலர்களினால். அவர்கள் பொதுபல சேனர்கள். அவ்வாறில்லாதுவிட்டால் பணம் பெறுவது ரியால்களினால், டினார்களினால் அவர்கள் ஜாதிக்க பல சேனர்கள். இருபகுதியினரும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகளைப் போன்றவர்கள். இவர்கள் இருபகுதியினரும் இலங்கை வரலாற்றுக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த பொருளான பௌத்த தர்மத்தை விற்றுச் சாப்பிடுபவர்கள்.

பௌத்த மதத்தை மாற்றியமைத்து தங்களது வயிற்றை வளர்க்கிறார்கள். இந்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்தத்தை நாம் அறிவோம். உயிர்த்தியாகம் செய்து, இரத்த பூசை செய்துதான் இந்நாட்டுக்கு நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்தோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com