இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து வெளியிட்ட கருத்து தவறா னது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள துடன் மஹேல ஜயவர்த்தனவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகளின் பெயர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மஹேல வெளியிட்டுள்ள கருத்துக்கு அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக மஹேல நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறுவது போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது முதலில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஆனால் மஹேல ஜயவர்த்தனவும் குமார் சங்கக்காரவும் தங்களது ஓய்வு அறிவிப்பை முதலில் ஊடகங்களுக்கே விடுத்திருந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன இத்தகவலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது ஓய்வு குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்காமல் ஊடகங்களுக்கு அறிவித்ததால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹேல ஜயவர்த்தனவின் கருத்துடன் குமார் சங்கக்கார இணங்கினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அழுத்தம் ஊடகங்களின் விமர்சனம் இவை எல்லாவற்றிற்கும் முகங்கொடுத்தே வெற்றியை பெற்றதாக குமார் சங்கக்கார தெரிவித்தார். ஊடகங்கள் விமர்சனம் செய்ய வேண்டியது அவசியம் எனவும் சில ஊடகங்கள் அநாவசிய விமர்சனங்களை செய்வதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்தார். எனினும் இலங்கை மக்களுக்காக கிரிக்கெட் விளையாட்டில் கூடிய கவனம் செலுத்தி கிண்ணத்தை வென்றதாக குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.
f0oolish Cricket board
ReplyDelete