Sunday, April 20, 2014

பாரீஸ் லாச்சப்பலில் பாணுவின் தம்பி மகேஸ் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

பாரிஸ் லாச்சப்பல் பிரதேசத்திற்கு புலிகளின் பொறுப்பாளாராக கடந்த சில காலங்களாக புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான பாணுவின் தம்பி மகேஸ் என்பவர் செயற்பட்டு வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் நேற்று 19.4.2014 மக்கள் கடைக்கு முன்பாக இனந்தெரியாத குழு ஒன்றினால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இருவர் அருகில் போதல்கள் மற்றும் பொல்லுகள் கொண்டு நபர்கள் இருவர் தாக்கியதில் மகேஸின் முகம் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் அவர் லாச்சப்பல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

லாச்சப்பல் பிரதேசத்திலுள்ள தமிழ் கடைகளில் மேற்கொள்ளப்படும் வசூலிப்புக்களை பங்கிடுவதில் அல்லது வசூலிப்பு போட்டி காரணமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment