இலங்கையில் பத்துக்கு அறுவர் மனநோயாளிகள்!
“இந்நாட்டு மக்களில் 60% ஆனோர் மனநோயாளிகள் என மேல் மாகாண சமூகப் பணிப்பாளர் அனுஷா கோகுல குறிப்பிட்டார்”
சமூக சேவைகள் அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக கொழும்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இன்று சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. விவாகரத்துக்கள் பல்கில் பெருகியுள்ளன. நீரிழிவு நோய் காரணமாக கால்களை வெட்டுவோர் தொகை அதிகரித்துள்ளது. வீதி விபத்து காரணமாக தினந்தோறும் ஊனமுறுவோர் தொகை கூடிச் செல்கிறது. இலங்கையிலுள்ள ஒவ்வொரு பத்துப் பேரிலும் ஏழு பேரில் ஆறுபேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர் பாலியல் வல்லுறவுகள், சிறுமியர்கள் கர்பத்திற்குள்ளாக்கப்படுதல், விபச்சாரத் தொழில், மந்தபுத்தியிலான பிள்ளைகளின் பிறப்பு நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் சிந்திக்க முடியாத அளவில் சமூகப் பிரச்சினைகள் கூடிச் செல்லும். இதனால் சமூக சேவைகள் பற்றிய தெளிவு பரவலாக்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment