முன்வைத்த காலை பின்வைக்காமல், தங்களது தீர்மானத்தில் உறுதியாக இருங்கள்! -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட ஆணையின் பேரில் தடைசெய்யப்பட்டுள்ள க்ளைபோஸட் பூரண களைகொல்லி விடயத்தில் பூச்சிக்கொல்லிகள் எதிர்ப்பு பதிவாளர் மற்றும் ஆலோசனைக் குழுவினர் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
உலகின் விவசாய இரசாயன உற்பத்தியின் முன்னோடியான மொன்ஸேன்டோ நிறுவனத்தின் உற்பத்தியான இந்த பூரண களை கொல்லி தடைசெய்யப்பட வேண்டும் என்ற பிரேரணையோடு அதனைத் தடைசெய்வதற்காக இலங்கை மற்றும் பிரேசிலின் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்க செயற்றிட்டமொன்றை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
க்ளைபொஸெட் இரசயானத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை நிறுவுவதற்காக, அதற்கான விளம்பரங்களை பத்திரிகை சஞ்சிகைகளில் வெளியிடுவதற்கு, க்ளைபொஸெட் இல்லாமல் விவசாய உற்பத்திகள் குறைந்தே செல்லும் எனும் எண்ணப்பாட்டை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு, க்ளைபொஸெட் பற்றி அறிவுறுத்துபவர்களுக்கு இழிவுண்டாக்குவதற்கு இந்தப் பணம் செலவிடப்படுகின்றது.
இவ்வாறான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்ததோடு, அமெரிக்காவில் வசிக்கும் உயர்மட்ட இலங்கை வைத்தியர்கள் குழுவொன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தாங்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதமொன்றில், எவர்களினதும் தலையீடுகளுக்கு தலைசாய்க்காமல் தாங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்பட செயற்படுங்கள் எனக் கோரியுள்ளது.
க்ளைபொஸெட் இரசாயனம் தொடர்பில் சரியான முடிவுவரும் வரை இத்தடை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மேலும் இக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தினரை தோற்கடித்த கால கட்டத்தில் இவ்வைத்தியர்க் குழுவினர், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையர்களை ஒன்றிணைத்து, இலங்கைக்காக பாரிய நற்காரியங்களைப் புரிந்த மேதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment