வடக்கு கிழக்கு மக்களின் மிகப் பிரசித்திபெற்ற மீனினங்களின் கொடுவாய் மீனும் ஒன்றாகும். மீன்பிடித் தொழில் ஈடுபடுவோர் பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் இந்த மீனை மிகவும் குறைந்தளவிலேயே பிடித்து வருவர்.
காரணம் இது ஓர் அரிதான மீனாகவும் மிகவும் அதிக ருசி கொண்ட மீனாகவும் விளங்குவதனால் நம் நாட்டுமக்களும் வெளிநாட்டவர்களும் விரும்பி உண்பர்.
இந்தவகை மீனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தனது கிழக்கு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஆக்கபூர்வமான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் கடல் வளங்களைமுறையாகபயன்படுத்திஅதன் மூலம் இலாபம் ஈட்டி அந்நிய செலாவணியை அதிகரிக்கச் செய்யும் ஹாபிஸ்; நசீர் அஹமட்டின் திட்டம் தற்போது துரிதகதியில் அமுல்படுத்தப்பட்டுவருகிறது.
குறுகியகாலத்தில் பல்வேறுதிட்டங்களுக்குஅடித்தளமிட்டுள்ளஅவர் இத்திட்டங்களைமிகவிரைவில் செயல்படுத்ததொடங்கியுள்ளார். அந்தவகையில் பெயர் பெற்றகொடுவாய் மீனைவளர்க்கும் திட்டத்திற்குஅவர் வழி வகுத்துள்ளார்.
இதன் ஆரம்பகட்டமாககுச்சவெளிபிரதேசத்தில் 500 சதுரஅடிப்பரப்பில் கொடுவாய் மீன் குஞ்சுகளைவளர்க்கும் பணிதொடங்கப்பட்டுள்ளது.
இந்தமீன் திட்டத்தில் ஆர்வம் கொண்டநோர்வேநாட்டுமுதலீட்டாளர் குழு அண்மையில் கிழக்குமாகாணத்திற்குவிஜயம் செய்துஅங்குள்ளவளங்களைபார்வையிட்டதுடன் திருகோணமலைக்குச் சென்று விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டைசந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொடுவாய் மீன் வளர்ப்புத் திட்டத்தில் தமது ஆர்வத்தை வெளியிட்ட தூதுக்குழுவினர் நோர்வேயில் இந்தமீனுக்குரிய கிராக்கிபற்றி விவரித்தனர்.
இந்தத் திட்டத்தினை விரிவாக தொடங்குவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்த நோர்வே முதலீட்டாளர்கள் சீனன்குடா,கிண்ணியா,தம்பலகாமம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை,ஆரையம்பதி - காத்தான்குடி போன்ற இடங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் இத்திட்டத்தை விஸ்தரிப்பதற்கு தேவையான முழு வழிகளையும் பெற்றுத் தருமாறும் மாகாண அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
(அஸ்ரப் ஏ சமத்)
No comments:
Post a Comment