Monday, April 21, 2014

சந்திரிக்காவுடன் ஆளும் கட்சியின் வலதுசாரிகள் பேச்சுவார்த்தை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவைச் சந்தித்து அவருடன் கலந்தாலோசிப்பதற்கு, ஆளும் கட்சியில் வலது சாரியைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைச்சர்கள் தயாராகியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலை, சர்வதேசிய ரீதியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரீவீ குணசேக்கர, திஸ்ஸ விதாரன ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் கூடிய குழுவினர் எதிர்வரும் இருவாரங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.

ஹொரகொல்லவில் இதற்கு முன்னரும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதுடன், ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய தொழிலாளர்கள் ஒரு பகுதியினரும் கண்டியில் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment