Thursday, April 24, 2014

அமைச்சர்கள் காணிகளைக் கொள்ளையடிக்கிறார்கள்! - சோபித்த தேரர்

எல்.ரீ.ரீ. அமைப்பை இலங்கையில் தோற்கடித்தபோதும், பிறிதொரு வகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டினுள் செயற்பட்டுவருகின்றது என ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய தோரகொலயாய வித்தியாலயத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விழாவொன்றின் போது பிரதம அதிதியாக்க் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்நாட்டினுள்ளே அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்குள்ளாக்கும் இருவேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று நண்பர்கள் என்ற முகமூடி தரித்துள்ள பகைவர்கள்.

அடுத்த சக்தி என்ன தெரியுமா? அரசாங்கத்தை பிரச்சினைக்குள்ளாக்குகின்ற அமைச்சர் ஒருவர். அவர் காணிகளை கொள்ளையிடுகிறார்.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்தன் பின்னர், புதியதொரு முகந்தரித்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த சக்தி என்னவென்றால், சென்ற சில நாட்களுக்கு முன்னர் துறைமுகம், விமான நிலையம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வு எங்களுக்கு புத்தி புகட்டியுள்ளது.

இந்த இருபகுதியும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு காட்டுவதுபோல துரோகம் இழைக்கின்றன. இவர்கள் இவ்வாறு செய்வதனால் அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் பிரதேசங்களிலிருந்து பகைவர்கள் தேவைப்படுவதில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment