சமூகத்தை அழிப்பதிலும் பார்க்க பலப்படுத்தி பாதுகாப்பது, சகல ஊடங்களின் பொறுப்பு – மகிந்த
எமது கலாசாரத்தையும், எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம், அதனை அழிப்பதிலும் பார்க்க பலப்படுத்தி பாதுகாப்பது, சகல ஊடங்களின் பொறுப்பாகுமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 37வது வருடாந்த நிறைவேற்று விருது வழங்கும் விழா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஜனநாயகத்தின் முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும், ஊடகங்களுக்கு தீர்க்கமான பொறுப்பு இருப்பதாக, தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் ஒரு அமைதியான யுகம் தற்போது உருவாகியுள்ளதாகவும், முதலீடுகளுக்கு சிறந்த வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனூடாக கூடிய பயனை அடைந்து கொள்ளுமாறு, ஜனாதிபதி, தனியார் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தார். அபிவிருத்தி திட்டங்களில் எதிர்வரும் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் அன்றி 2050ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை நோக்கி செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜனநாயகம் மற்றும் பலமான பொருளாதார அடிப்படைகளுடன் கூடிய ஒரு நாடாக முன்னேறி செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அரச மற்றும் தனியார் துறையின் முன்னேற்றம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதுடன், இவ்விரு துறைகளினதும் ஒருங்கிணைப்பு மூலம் நீண்டகால அபிவிருத்தி முன்னேற்றங்களுக்கான திட்டங்களை வகுக்க முடியுமென்றும், அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மத்திய வங்கி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஆசியாவில் அதிகூடிய வளர்ச்சி உள்ள நாடாக இலங்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
0 comments :
Post a Comment