அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
அமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும் அவரை இங்கு ஒழித்து வைத்துள்ளார் எனவும் அதிகார தொணியில் பேசினர்.
அமைச்சின் ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்திய இவர்கள். இதன் போது கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் பௌத்த பிக்குகளிடம் இதனை குறிப்பிட வேண்டாம் என தெரிவித்தனர்.
பொதுபல சேனா இறுதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது அமைச்சின் செயலாளர் வந்த பிக்குமாரை இருந்து ஆகாரம் அருந்தி செல்லுமாறு கூறிய போது வரும்நாட்களில் ஒரு மரணம் விழும் அப்பொழுது வந்து சாப்பிடுகிறோம் என கூறி இவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.
No comments:
Post a Comment