இன்று “ஆசியாவின் ஆச்சரியம்” என இலங்கை குறிப்பிடப்பட்டாலும், மனிதாபிமானம் அற்ற நிலையில் உள்ளது என கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிடுகிறார்.
அநுராதபுரம், ஹயலேகம அக்ராராம விகாரையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் திசாநாயக்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இன்று நாங்கள் பௌத்த சமயத்திலிருந்தும் தூர விலகியிருப்பதாக நினைக்கிறேன். இன்று நாங்கள் பௌத்த விகாரைகளிலிருந்து தூர விலகியிருப்பதன் பிரதிபலனை அன்றாடம் ஊடகங்கள் மூலமாக கண்டும் கேட்டும் வருகின்றோம்”
கொலை, கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இந்நாட்டில் நாளாந்தம் எத்தனை எத்தனை? ஏன் இந்நாட்டுக்கு இவ்வாறு ஏற்பட்டது? என நான் சிந்திக்கிறேன். இன்னும் எங்களுக்கு இது விளங்குவதில்லை. உண்மையில் நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளோம்.
கிராம வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன, மின்சாரம், குடிநீர் வசதி கிடைக்கின்றது, துறைமுகம், விமான நிலையங்கள் உருவாகின்றன. இந்நாடு ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்வதற்காக நாங்கள் ஆயத்தமாகிவருகின்றோம். என்றாலும், இந்நாட்டு மனிதர்களின் மனிதாபினம் மட்டும் இல்லாமலாகிச் செல்கின்றது”
(கேஎப்)
No comments:
Post a Comment