Monday, April 7, 2014

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை – ஜாதிக ஹெல உறுமய!

எந்தவொரு நாடும் தனது இறைமையை பணயம் வைக்க விரும்புவதில்லை எனவே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே பொருத்தமானது என்பதுடன் சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளா்.

மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை விட வெறுமனே நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.    

No comments:

Post a Comment