இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நபரொருவர் டுபாயில் நடைபெற்ற விரைவாக தோசை உண்ணும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் பெண்ணொருவர் உட்பட 25 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 1.25 மீற்றர் நீளமான தோசை ஏனையோரை விட விரைவாக உண்டு இந்தியாவைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவர் வெற்றிபெற்றார். இவர் இந்தியாவின் சமயல்காரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
போட்டியில் பங்குபற்றிவர்களில் ஷாஜஹான் உட்பட 5 பேர் மாத்திரமே விரைவாக உண்ணுவதில் போட்டியாக இருந்துள்ளனர். ஏனையோர் தோசையை ஆறுதலாக உண்டு மகிழந்தனர். தோசை பிளாஷாவில் நடைபெற்ற இப்போட்டியை சுப்பர் எப்.எம். என்ற மலையாள வானொலி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. போட்டியின் நடுவே நீர் அருந்த அனுமதிக்கப்பட்டமையினால் யாருக்கும் அசம்பாவிதம் எதுவும் இடம்பெறவில்லை என வானொலியின் அறிவிப்பாளர் கூறினார்.
போட்டியில் வெற்றிபெற்றமை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷாஜஹான் கூறுகையில், தோசையை சிறு துண்டுகளாக்கி சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்ந்து ஏனையோர் உண்டு முடிப்பதற்கு முன்னார் நான் முடித்துவிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment