Wednesday, April 30, 2014

நாளை மேதினக் கொண்டாட்டம்! "தாயகத்தை காப்போம் சுதந்திரத்தை பாதுகாப்போம்"- ஜனாதிபதி மகிந்த தலைமையில் கூட்டம்!

நாளை, பாட்டாளி மக்கள் மே தினத்தை அனுஸ்டிக்கின்றனர். இம்முறை மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் 17 கூட்டங்கள் மற்றும் 15 ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. மே தினத்தையொட்டி, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன.

நாளை காலை முற்பகல் 9 மணி முதல் ஊர்வலங்கள் முடியும் வரை, கொழும்பு பொதுநூலக சுற்றுவட்டத்திலிருந்து தாமரை தடாக சுற்றுவட்டம் வரையான பாதை, பேஸ்லைன் வீதியின் சமந்தா திரையரங்கிலிருந்து பொரளை வரையான பாதை, நண்பகல் 12 மணி முதல் கூட்டம் முடியும் வரையும், போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்ப்படுத்தப்படுமென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர மாவத்தை, டீன்ஸ் வீதி, மருதானை வீதி, பொரளை சந்தி வரை முற்பகல் 11 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, பித்தளை மற்றும் பிளவர் வீதி சந்தியிலிருந்து ஜே.ஓ.சி. சந்தியை நோக்கி வாகன போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும். அத்துடன் கொழும்பின் மேலும் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் இம்முறை ஜனாதிபதி தலைமையில், கெம்பள் மைதானத்தில் நடைபெறும். இம்முன்னணியின் மே தின ஊர்வலம், தாமரை தடாகத்திலிருந்து ஆரம்பமாகும். ஷதாயகத்தை காப்போம் சுதந்திரத்தை பாதுகாப்போம்| எனும் தொனிப்பொருளில் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

சர்வதேச ரீதியிலிருந்து ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக, ஜனாதிபதிக்கு தொழிலாளர் வர்க்கம் ஆதரவளிக்குமென, தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிகக்காட்டியுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அவர்கள் இதனை தெரிவித்தனர்.

கூட்டு தொழிற்சங்க சம்மேளன தலைவர் அலவி மௌலானா, ஸ்ரீ லங்கா சுதந்திர ஊழியர் சங்க பொது செயலாளர் லெஸ்லி தேவேந்திர, அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளன தலைவர், டபிள்யு.எச். பியதாச, இலங்கை தொழிலாளர் சம்மேளன செயலாளர் சோமவீர சந்திரசிறி ஆகியோர், இவ்வாறு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment