Saturday, April 5, 2014

கிளிநொச்சியில் காலை முதல் நடைபெறும் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா!


கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(05.04.2014) காலை ஒன்பது மணிக்கு பாரம்பரிய தமிழ் சிங்கள கலாசார முறைப்படி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான தலையணை சண்டை, கீறீஸ் மரம் எறுதல் மற்றும் துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன் மாலையில் கலை நிகழ்வுகளும் இசை நிகழ்வுகளும் நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment