சிறைச்சாலையினுள்ளே அரச வாழ்வு வாழ்வதற்கு வெறும் இரண்டு இலட்சம் மாத்திரமே செலவாகின்றது என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பாதுகாப்பு நடவடிகை மேற்கொள்வதற்காக, நீர்கொழும்பு வலய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த லியனகே
ஒழுங்குசெய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
“இன்று ஒருசிலர் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இரண்டு இலட்சம் செலவு செய்தால் உள்ளே அரச சொகுசுதான். இன்று அதுதான் நிலைமை. பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து செல்வந்தர்களாக வாழ்கிறார்கள்.
நீர்கொழும்பை பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகளாகிய நாங்களும் பாரிய பொறுப்பைச் சுமக்க வேண்டியுள்ளது. இன்று மிக விரைவில் பணம் தேடி செல்வந்தர்களாக மாறுவதற்காக சிலபேர் விருப்பமாக இருக்கின்றார்கள். சிலர் இந்த கொள்ளையடித்தலை அரசியல்மயப்படுத்த முயற்சி செய்கிறார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment