Sunday, April 27, 2014

நெடியவனை கைது செய்ய சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விடுத்துள்ளது!

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர் என கருதப்படும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்ப பகுதியில் அறிவித்திருந்தனர்.

இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நெடியவன் தொடர்பிலான இணைய சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் நெடியவனது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment