Monday, April 7, 2014

இலங்கைக்கெதிரான விசாரணை “மே”யில்???

அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் ஒன்றிணைந்து 25 ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள விசாரணை மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவிக்கின்றன.

“த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்திப் பத்திரிகை இதுபற்றித் தெரிவிக்கும்போது - அவ் விசாரணையானது பெரும்பாலும் நிபுணத்துவம் மிக்கவர்களாலேயே மேற்கொள்ளப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு ஏற்ப, 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்தினாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், போர்க் குற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் விசாரணை செய்யப்படவுள்ளது.

அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளினால் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகள் வெற்றிபெற்றது. அதற்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 12 நாடுகள் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டன.

மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணை செய்யப்படவுள்ள விடயங்களின் அறிக்கை வாய்மொழி மூலமாக செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 27 ஆவது மனித உரிமை மாநாட்டு அமர்வின்போதும், விசாரணை தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய அறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் 28 ஆவது அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதுஎவ்வாறாயினும், இவ்விசாரணைகள் தொடர்பில் இதுவரை இலங்கை கவனத்திற்கொள்ளாதிருப்பதாகவும், அப்பிரேரணைகளை நிராகரிப்பதற்காக ஏது செய்யலாம் என தீர்மானித்து வருவதாகவும் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com