Wednesday, April 9, 2014

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! - ஐதேக

இந்நாட்டின்மீது சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர் பிலான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கும், அது பொய்யென்பதை நிரூபிப்பதற்கும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல குறிப்பிடும்போது, அரசாங்கம் இதைக் கண்டுகொள்ளாதவிடத்தும், இதிலிருந்து நழுவிச் செல்ல முயலும்போதும் சர்வதேசம் ஒருதலைபட்சமாக நின்று, ஒருதலை பட்ச முடிவு எடுக்கும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கி, சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் அர்த்தமற்றவை என்பதை நிரூபிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும் எனவும், ஏதேனும் ஒருவகையில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அரசாங்கம் செய்வது எதுவோ? எனவும் அவர் வினா தொடுத்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment