பான் கீ மூனின் அறிக்கையில் தேவையற்றவிடயங்கள்! இலங்கை அரசாங்கம் கண்டனம்!
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாலியல் வன்முறைகள் பற்றி சமர்ப்பித்த அறிக்கையில் மனித உரிமைகள், பொறுப்புகள் மற்றும் நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளையும் இணைத்திருப்பது குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் சமீபத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் முரண்பாடுகள் தொடர்புடைய பாலியல் வன்முறை அறிக்கையில் இலங்கை தொடர்பான மனித உரிமைப் பேரவையின் பிரேரணையையும் இணைத்திருப்பதாகவும் அதில் பொறுப்புகள் மற்றும் முழுமையான உண்மை மற்றும் நல்லிணக்கப்பாட்டு ஆணைக்குழு ஆகியனவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் சமர்ப்பித்துள்ள இவ்வறிக்கைக்கு தொடர்பற்ற இலங்கை தொடர்பான பிரேரணையையும் பாதுகாப்பு சபைக்கு விடுத்த அறிக்கையில் செயலாளர் நாயகம் இணைத்திருப்பது குறித்தும் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை தானே குணமாக்குவ தற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறதென்றும் இது தொடர்பாக சர்வதேச நல்லிணக்கப்பாட்டு நடவடிக் கையை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கத் தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட நடைமுறைகளை அர சாங்கம் கடைப்பிடிக்கும் போது இவ் விதம் தெரிவித்திருப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஆயுதப்படை வீரர்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக போலியான குற்றச்சாட்டு களை சில அமைப்புகள் அரசாங்கத்தின் மீது சுமத்தி வருவதாகவும் இலங்கை இராணுவத்தினர் எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான யுத்தத்தில் யுத்தக் குற்றச்சாட்டுகளை புரிந்தார்கள் என்று சனல் 4 செய்திச் சேவை வெளியிட்டுள்ள பல்வேறு விபரணப் படங்கள் பொய்யானவை என்றும் வேண்டுமென்றே திணிக்கப்பட்டவை என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment