பொலிஸாரின் சேவை உடுப்புக் கழுவுதலே எனக் கூறுவதை நான் விரும்பவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
“என்னை யார் விமர்சித்தாலும் அதனை நான் பெரிதாக்க் கொள்ள மாட்டேன். நான் அதனை விரும்புகின்றேன்..
என்றாலும், நாங்கள் செய்கின்ற சேவையை ஆடை தோய்க்கும் தொழிலுக்கு ஒப்பிட்டுப் பேசுவதை நான் விரும்பவில்லை.
நான் ஒருபோதும், எந்தவொரு பத்திரிகைக்கும் இணையத்தளத்திற்கும் நான் செய்யும் தொழில் போதும் போதுமென்றாகியுள்ளது எனச் சொல்லவில்லை. மேலும் நான், முதுகில் சீவன் இல்லாத பொலிஸ் அதிகாரிகள் இருப்பதால் எனக்கு பொலிஸ் தொழில் போதும் போதுமென்றாகியுள்ளது என்று சொல்லவில்லை.
என்னால் விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் பொறுத்துக் கொள்ளவியலும். அதனை நான் விரும்புகின்றேன். நான் ஒருபோதும் ஆளுங் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சிக்கு எதிராகவோ கதைக்கவில்லை. என்றும் நீதமாகவே நான் நடந்துகொண்டுள்ளேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment