ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் மைத்துனரான வைத்தியர் சுபாஷ் சந்திர பிரனாந்து என்பவர் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து மன்னிப்புக்கோர உடன்பட்டுள்ளார்.
இவர் தொடர்பான குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, சந்தேகநபர் பொலிஸ் திணைக்களத்திடம் நீதிமன்றத்தின் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதி நீதிமன்றத்தின் முன்னிலையில் மோசமான முறையில் நடந்துகொண்டு, வைத்தியத் தொழிலுக்கே இழிவு உண்டாக்கியிருக்கின்றார் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
தான் குறித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன்னிலையில் தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக்கோர முன்வந்துள்ளதாகவும், தனக்கு மிகக் குறைந்த தண்டனையே வழங்குமாறும் சந்தேக நபரினால் நீதிமன்றத்திற்கு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவை அலசியுள்ள நீதவான், இதுபற்றிக் குறிப்பிடும்போது சந்தேக நபரின் இச்செயற்பாடு மூலம் பொலிஸார் ஒருவரின் தொழிலும் பறிபோயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment