ஸ்ரீஜயவர்த்தனபுர பாராளுமன்றக் கட்ட்டத் தொகுதி புனர் நிர்மாணம் செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதால், பாராளுமன்றக் கூட்டங்களை ஹம்பாந்தோட்டையில் நடாத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச கருத்தரங்ககப் பகுதி பற்றி கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட செய்திகள் குறிப்பிடுகின்றன.
புனர்நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகியதன் பின்னர் குறைந்த்து மூன்று மாதங்களேனும் ஸ்ரீஜயவர்த்தனபுர பாராமன்றத்தில் கூட்டங்கள் நடைபெற மாட்டாது. அவ்வாறாயின், அக்கால கட்டத்தில் அவசர திட்டங்கள் மேற்கொள்வதற்கு பாராளுமன்றம் கூட வேண்டிய தேவையுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் அநேகமானவற்றை அங்கு நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
No comments:
Post a Comment