Monday, April 28, 2014

மீண்டும் சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தவே சிலர் முயல்கின்றனர்!

இலங்கையின் வாழுகின்ற சகல இனங்களையும் ஜக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக்கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது. இந்த நாட்டில் உள்ள சகல ஊடகங்களும் தினந்தோறும் இனங்களுக்கிடையே குரோத மனப்பாண்மையை உண்டுபண்னும் செய்திகளையே மக்களுக்கு கொண்டு செல்கின்றன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று முன்தினம் லேக் ஹவுசில் தினமின பத்திரிகையில் இணைப்பு இதழாக வெளியிடுகின்றன ஜனசெவன பத்திரிகையின் 3வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஜனாதிபதி இணைப்பாளருமான உபுல் திசாநாயக்க, பொது முகாமையாளர் அபய அமரதாச தினமின ஆசிரியர் காமினி ஜயலத், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் விமலசிறிபெரெரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்,

“இலங்கையில் வெளிவருகின்ற ஊடகங்களில் நாளாந்தம் துஷ்பிரயோகம், கொலை, களவு, பெண்கள் மானபங்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தை குழப்புகின்ற செய்திகளையே முன்நிலைப்படுத்தி செய்திகளையே காணக்கூடியதாக உள்ளது. இச்செய்திகளை நாளாந்தம் வாசிக்கும் அல்லது தொலைக்காட்சிகளில் அவதானிக்கும் பொதுமக்களது மனோநிலை பாதிக்கப்படுகின்றது.

சமூகங்களை ஜக்கியபடுத்தி நல்லதொரு மானிட சமுகத்தை கட்டியெழுப்பும் ஊடகமே தற்காலத்தில் தேவைப்படுகின்றது.

லேக் ஹவுஸ் பத்திரிகையான தினமின பத்திரிகையூடாக அமைச்சுக்களின் அபிவிருத்திகள் மற்றும் செய்திகள் மக்களைச் சென்றடைவதற்கு பல்வேறு இணைப்பு இதழ்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் கடந்த 3 வருடங்களாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவும் லேக்ஹவுசின் இணைப்பு இதழும் இணைந்து ஜனசெவன பத்திரிகை வெளிவந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் இலங்கையில் உள்ள ஊடகநிறுவனங்களில் லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தின் வெளிவருகின்ற பத்திரிகைகள் இந்த நாட்டின் இன குரோத செய்திகளுக்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் மக்களுக்கு செய்கின்ற அபிவிருத்திகள் மற்றும் சகல சமுகங்களினையும் சமமாக கொண்டு செல்லும் பத்திரிகையாகவே நாம் அவதானிக்க முடிகின்றது.

கடந்த வாரம் நான் வெளிநாடுகளில் தங்கியிருந்தேன். லண்டனில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் பள்ளிவசால்களை உடைத்தார்கள். ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு ஊடகமும் அதனை செய்தியாக வெளியிடவில்லை. அந்த செய்திகளுக்கு அந்த நாட்டில் உள்ள பீ.பீ.சி சி.என்.என். அல் ஜசீரா முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஆனால், இலங்கையில் சிறு நிகழ்வுக்கு பாரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது.

இன்று சிலர் மீண்டுமொரு சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானதொரு நிகழ்வின் பின்ணனியில் அமெரிக்கா உள்ளாவதற்கும் தருணம் பார்த்துக்கொண்டு இருகின்றது. அதே போன்று மியன்மாரில் பௌத்த முஸ்லிம் கலவரத்தின் பின்னர் அந்த நாட்டில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்துள்ளது” எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

(அஸ்ரப் ஏ சமத்)

No comments:

Post a Comment