கல்முனை மாநகர சபையில் சீருடை வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கல்முனை மாநகரசபையில் சுகாதார சுத்திகரிப்பு கடமையில் ஈடுபடும் தற்காலிக மற்றும் நிதந்தர மேற்பார்வையாளர்கள் , ஊழியர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (3) கல்முனை மாநகரசபை கட்டட முன்றலில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையில் கடமை புரியும் சுகாதார சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் தமது கடமையினை மேற்கொள்ளும் போது பொதுமக்களாலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸாராலும் இவர்களை அடையாளம் காண்பதில் பலவிதமான பிரச்சினைகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன. இதனை கருத்திற்கொண்டு கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் மேற்படி திட்டத்தினை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
சுகாதார சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தமக்குரிய சீருடையினை கொள்வனவு செய்வதற்காக வருடம் தோறும் ஒரு தொகைப் பணம் வழங்கப்பட்டுவரும் நிலையில் கல்முனை மாநகரசபையில் கடமையாற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் சீருடையின்றியே தமது கடமைகளை இதுவரை காலமும் செய்துவந்துள்ளனர்.
சீருடை வழங்கும் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி , டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ,கல்முனை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் , மாநகரசபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எம்.அமிர்தலிங்கம், எம்.விஜேரட்னம், எஸ்.ஜெயக்குமார், மற்றும் மாநகரசபை உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(இஸ்ஹாக்)
0 comments :
Post a Comment